பொதுநிலையினர் பணிக்குழு
சிவகங்கை மறைமாவட்டம்
நோக்கங்கள்
1. திரு அவையில் பொதுநிலையினரை உற்சாகமாக, அர்ப்பணிப்புடன், ஆர்வத்துடன் பங்கேற்க ஆற்றுப்படுத்துததல்.
2. திரு அவையில் பெண்கள் மற்றும் இளையோரின் பங்கேற்பை உற்சாகமூட்டுதல்
3. பங்குத் தளங்களில், திருஆட்சியாளருக்கு பொது நிர்வாக ஆலோசனைகள் வழங்க பங்கு அருள் பணிப் பேரவையும், நிதி நிர்வாக ஆலோசனைகள் வழங்க நிதி நிர்வாகக் குழுவும் உருவாக்க பொதுநிலையினருக்கு பயிற்சி மற்றும் தேர்தல் நடத்துதல்.
4. பங்கில் ஒவ்வொரு பொதுநிலையினரும், செயல்படும் பணிக் குழுக்கள், பக்த சபைகள் மற்றும் இயக்கங்களில் இணைந்து செயல்பட வலியுறுத்தல்.
5. பொதுநிலையனருக்கு திரு அவை சட்டம், குடியுரிமை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், மருத்துவ மற்றும் அரசியல் விழிப்புணர்வு வழங்குதல்.
6. பொதுநிலையினருக்கு தலைமைத்துவ பண்பு உருவாக்க பயிற்சிகள் நடத்துதல்.
செயல்பாடுகள்
1. பொதுநிலையினருக்கான சட்டம் மற்றும் மருத்துவ விழிப்புணர்வுக் கருத்தரங்கள் நடத்தப்பட்டது.
2. பொதுநிலையினர் திரு அவையில், சமூகத்தமில், அரசியலில் ஆர்வமுடன் பங்கேற்க விழிப்புணர்வுக் கருத்தரங்கங்கள் நடத்தப்பட்டது.
3. இரண்டாம் வத்திக்கான் சங்க ஏடுகள் - மறுவாசிப்புக் கருத்தரங்குகள் மறைவட்ட அளவிலும், மறைமாவட்ட அளவிலும் நடத்தப்பட்டது.
4. தலைமைத்துவம் மற்றும் கருத்தாளர் பயிற்சிகள் வழங்கப்பட்டது.
5. பங்கு அருள்பணிப் பேரவை ரூ நிதிக்கு உருவாக்க பயிற்சி வழங்கப்பட்டது. தேர்தல் நடத்தப்பட்டது.
6. இணைந்து பயணிக்கும் திரு அவையாக வாழ்வோம் என்ற மையக் கருத்தில் மறைவட்டக் கருத்தங்கங்கள் நடத்தப்பட்டது.
ஜோ. சேவியர் இஞ்ஞாசி முத்து
செயலர்
திருமதி. P. சகாயராணி
இணைச் செயலர்
PHOTOS
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |








